தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதே சமயம் மேடையில் பேசும்போதெல்லாம் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தொடர்ந்து கூறி வருகின்றார். இதனிடையே அதிமுக மற்றும் பாஜக இடையே ஒரு முரண்பாடு நிலவி வருகிறது.
இதனால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியின் திமுக மீனவர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பிரவீன், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். அதுவும் உதயநிதி சட்டமன்ற அலுவலகம் முன் வாகனங்களில் இருந்த திமுக கொடியை இறக்கிவிட்டு இபிஎஸ் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். உதயநிதியின் சொந்த தொகுதியிலேயே திமுகவினர் விலகியது அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…