“பகீர் சம்பவம்.. 4 அடி நீள கோதுமை நாகம்”…. சிறுவனின் காலணிக்குள் காத்திருந்த அதிர்ச்சி… ஈரோட்டில் நடந்த ஷாக் சம்பவம்…!

Spread the love

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், பள்ளி மாணவன் ஒருவனின் காலணிக்குள் நான்கு அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வங்கி மேலாளர் பிரகாஷ் என்பவரின் மகன், பள்ளி முடிந்து விளையாடிவிட்டு தனது காலணிகளை வாசலில் கழற்றிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்து எச்சரித்தனர். விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், வீடு முழுவதும் பல மணி நேரம் தேடியும் பாம்பு சிக்காத நிலையில், இறுதியில் வாசலில் இருந்த சிறுவனின் காலணிக்குள் பாம்பு சுருண்டு பதுங்கியிருந்ததைக் கண்டறிந்து அதனை லாவகமாகப் பிடித்தார்.

பிடிபட்ட அந்த நாகப்பாம்பு ஆக்ரோஷமாகப் படம் எடுத்து ஆடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் அந்தப் பாம்பு பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. உணவு மற்றும் தங்கும் இடத்தைத் தேடியே பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன என்றும், குறிப்பாக செருப்பு ஸ்டாண்ட், படிக்கட்டுகள் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற மறைவான இடங்களை அவை தஞ்சம் அடையத் தேர்ந்தெடுப்பதாகவும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.

பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கையாக, காலணிகளை அணியும் முன் அவற்றை நன்கு தட்டிச் சோதிப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டைச் சுற்றி காடுகள் இருந்தாலோ அல்லது தவளைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தாலோ பாம்புகள் வர வாய்ப்பு அதிகம். எனவே, வீட்டின் நுழைவாயில் கதவுகளில் பாம்புகள் புகாதவாறு சிறிய துளைகளுடைய இரும்பு வலைகளைப் பொருத்துவது நல்லது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள வீடுகளில் காலணிகளைப் பாதுகாப்பான உயரத்தில் வைப்பதும், விழிப்புணர்வுடன் இருப்பதும் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்க உதவும்.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

5 மணத்தியாலங்கள் ago