தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொந்தரவு என்பது அதிகமாகிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிப்பது என்பது அச்சுறுத்தும். இதனிடையே சென்னை போரூர் அருகே டியூஷனுக்கு சென்ற எட்டு வயது சிறுவனின் முகம், கை கால்களில் நாய் ஒன்று கடித்துக் குதறி உள்ளது. அக்காவுடன் டியூஷன் சென்ற போது சிறுவனை தெரு நாய் கடித்துள்ளது. தெரு நாய் கடித்ததில் காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
அங்கு சிறுவனுக்கு தீவி ரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதே போல அப்பகுதியில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சரளாதேவி என்ற பெண்ணையும் நாய் கடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்களின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சிறுவனை நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…