7 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை… அதிர்ச்சி தரும் காரணம்… தமிழகத்தை உலுக்கும் பயங்கர சம்பவம்…!

Spread the love

சென்னையை அடுத்த ஆலந்தூர் எம் கே என் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு பெண் ஒருவர் நேற்று வந்திருந்த நிலையில் தன்னுடைய தம்பியான சென்னை அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (38) அங்கு அறை எடுத்து தங்கி உள்ளதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனக்கு தகவல் வந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த விடுதியின் மேலாளர் தொடர்ந்து விசாரித்த போது சதீஷ்குமார் என்பவர் அவரது ஏழு வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் இரவு அரை எடுத்து தங்கி இருந்ததை அறிந்து கொண்டார். உடனே ரூமுக்கு சென்று பார்த்தபோது சதீஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அருகில் ஸ்டெபி ரோஸ் என்ற ஏழு வயது குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரித்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமாருக்கும் ரெபேக்கா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய ஏழு வயது மகள் ஸ்டெபி ரோஸை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனைவி கணவர் சதீஷ்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதிக்கு மகளை அழைத்து சென்று தங்க வைத்த சதீஷ்குமார் மகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தியதும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

மேலும் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று நிலையில் அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயாரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை என்று கூறியும் உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

கிருஷ்ணகிரியில் அதிரவைக்கும் சம்பவம்… நீதிமன்றம் சென்ற நபர் காட்டில் சடலமாக மீட்பு…. 4 நாட்களுக்குப் பின் வெளியானபகிர் தகவல்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…

18 minutes ago

26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…

29 minutes ago

“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…

36 minutes ago

BREAKING: திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி… சற்று முன் பரபரப்பு…தமிழா அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…

45 minutes ago

“பாப்பா-வா?… பாப்பானா?… செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி உளறிய அந்த ஒரு வார்த்தை… திமுக-வை கதறவிட்ட அமைச்சர் ரமேஷ்…!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர்…

48 minutes ago

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி… எடப்பாடிக்கு டாட்டா காட்டிய பொன் ஜெயசீலன்… உடைந்தது ரகசியம்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…

54 minutes ago