கிருஷ்ணகிரியில் அதிரவைக்கும் சம்பவம்… நீதிமன்றம் சென்ற நபர் காட்டில் சடலமாக மீட்பு…. 4 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் தகவல்…!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு ஆஜராகி வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல நீதிமன்றத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்ட சரவணன், அதன்பின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், காணாமல் போன நான்கு நாட்களுக்குப் பிறகு, போச்சம்பள்ளி அடுத்த மாதம்பதி சிலம்பம் காட்டுப் பகுதியில் சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனின் மரணத்தில் மர்மம் மற்றும் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

BREAKING: தவெகவில் ஓபிஎஸ்?…. முடிவை மாற்றினார்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…

4 minutes ago

5 மணி நேரமாக ஓஹியோ வானில் வட்டமடித்த விமானம்… அமெரிக்க வரைபடத்தை வானில் வரைந்து உலகையே வியக்க வைத்த விமானி…!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின (Semiquincentennial) கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஓஹியோ மாநில வானில் வியக்கத்தக்க…

4 minutes ago

புனேவில் நடந்த விசித்திர சம்பவம்… நெட்டிசன்கள் கொந்தளிப்பு… வைரலாகும் வீடியோ…!

புனே நகரின் பவுட் சாலையில் கனமழை பெய்து கொண்டிருக்கும் போதே, சாலையில் உள்ள தடுப்பானில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் லாரி…

23 minutes ago

“திங்கட்கிழமை காலை 10 மணி.. செந்தில் பாலாஜிக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து”…. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்….. அலறும் அறிவாலயம்…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக…

28 minutes ago

“வீடு புகுந்து தாக்குதல்?.. அமைச்சர் செய்த காரியம்”… நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…. அடுத்து நடக்கப்போவது என்ன…?

கொலை முயற்சி வழக்கு ஒன்றில் புதுச்சேரி அமைச்சர் மரியவில்சன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி…

32 minutes ago