தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அதில் வேட்டையின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டியுள்ளார். இந்த போஸ்டருடன் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அறுபதிற்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் பி. வாசு.
நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ‘சந்திரமுகி 2’ படக்குழுவின் சார்பில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் போது தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பி. வாசு பரிசளித்தார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…