Categories: சினிமா

உயிருடன் இருக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. பிரபல நடிகரின் ரசிகர்கள் செய்த மட்டமான செயல்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்  நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லியோ பட இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் லியோ பட இரண்டாவது சிங்கிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.

நேற்று லியோ படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்விட்டதாகவும் பத்திரிகையாளர்களிடம் மிஷ்கின் கூறினார். ஆனால், இதில் நடிகர் விஜயை ஒருமையில் பேசினார் என கூறி, மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள். மேலும் இந்த பதிவில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

BREAKING: ‘புருஷன்’ படப்பிடிப்பில் பயங்கர விபத்து… அலறி அடித்து ஓடிய சுந்தர்.சி படக்குழு…. விஷாலுக்கு என்ன ஆச்சு?…. சற்றுமுன் அதிர்ச்சி….!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் 'புருஷன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

1 minute ago

“CM விஜய்க்கு பேரதிர்ச்சி”…. அறிவிப்பே வராத பெருந்துறையில் வேட்பாளரை இறக்கிய செங்கோட்டையன்…. தவெகவில் வெடித்த பூசல்….!

பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதற்குள்ளாகவே செங்கோட்டையன் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில்…

5 minutes ago

தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. சிக்கப்போகும் அரசு அதிகாரிகள்…. ஒரே நாளில் CM விஜய் வைத்த செக்….!

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்…

12 minutes ago

“திமுகவை திட்டாதீங்க”…. தொண்டர்களுக்கு அன்புமணி கொடுத்த ரகசிய சிக்னல்…. அதிமுகவை கழற்றிவிட அன்புமணி போட்ட ரகசிய கணக்கு….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…

24 minutes ago

நண்பனை பார்க்கச் சென்ற 16 வயது சிறுமி… 3 நாட்களாக புதரில் கிடந்த சடலம்…. டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…

32 minutes ago

“பாஜகவில் பதவியும் இல்லை… அரசியலும் வேண்டாம்”….. திடீரென சரத்குமார் பரபரப்பு பேட்டி….!

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை…

40 minutes ago