தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லியோ பட இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் லியோ பட இரண்டாவது சிங்கிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.

நேற்று லியோ படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்விட்டதாகவும் பத்திரிகையாளர்களிடம் மிஷ்கின் கூறினார். ஆனால், இதில் நடிகர் விஜயை ஒருமையில் பேசினார் என கூறி, மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள். மேலும் இந்த பதிவில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

