நண்பனை பார்க்கச் சென்ற 16 வயது சிறுமி… 3 நாட்களாக புதரில் கிடந்த சடலம்…. டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

Spread the love

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சுவரூப் நகர் பகுதியில் உள்ள குஷக் சாலை அருகே, கடந்த செப்டம்பர் 13 அன்று அழுகிய நிலையில் அச்சிறுமியின் சடலத்தை காவல்துறை மீட்டது. விசாரணையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தனது 17 வயது நண்பரைச் சந்திக்கச் சென்ற அந்தச் சிறுமி, டெம்போ வாகனம் ஒன்றிற்குள் வைத்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் ஆறு முறைக்கும் மேல் கத்தியால் குத்தப்பட்டு புதரில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, 72 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய டெம்போ வாகனத்தை அடையாளம் கண்டு 19 வயதான சிவம் என்பவரையும், 3 சிறுவர்களையும் கைது செய்தனர். மேலும், இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகளையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

4 minutes ago

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

33 minutes ago

கவுன், நெயில் பாலிஷ், லேடீஸ் செருப்பு… போலீசாரையே அரள வைத்த “அழகி”….. கையில் குழந்தையுடன் தப்பிய நபர்…. மேலாடையை விலக்கியதும் காத்திருந்த அதிர்ச்சி….!

பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…

40 minutes ago

“கலைஞரோட திமுக முடிஞ்சுபோச்சு”… ஸ்டாலின், உதயநிதி பற்றி கே.என்.நேரு பேசிய ரகசியம்…. வெடி குண்டை தூக்கி போட்ட துரை வைகோ…..!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…

49 minutes ago

ராமதாஸுக்குப் பிறகு இவர் தானா?…. சேலத்தில் உதயமான புது கட்சி….. ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?…. திடீரென கிளம்பிய புதிய அரசியல் புயல்….!

சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் "மாவீரர் மக்கள் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா எழுச்சியுடன்…

55 minutes ago