Connect with us

CINEMA

சில மணி நேரங்களில் தொடங்கப்போகும் கேப்டனின் கடைசி பயணம்.. பல லட்சம் மதிப்பில் தயாராகும் இறுதி ஊர்வல வண்டி.. செலவை ஏற்ற மாநகராட்சி..

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து, மக்கள் மனதில் குடி கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். தனது 71 வயதில் இன்று அவர் நம்மை விட்டு பிரிந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றுள்ளார்.  நடிகர் விஜயகாந்த் மதுரையில் 1952 இல் பிறந்தவர் விஜயராஜ் என்ற தனது பெயரை சினிமாவிற்காக விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டார். சினிமா வாய்ப்புக்காக ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் 1979 இல் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த அகல்விளக்கு, நீரோட்டம், தூரத்து இடி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சட்டம் ஒரு இருட்டறை ,வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் என்று இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினிகாந்த், கமலஹாசனுக்குடப் கொடுத்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கால் பதித்து கலக்கிய சிங்கம் தான் நம் கேப்டன்.

ஒரு சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்த இவர், கொரோனா தொற்று காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நேற்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்தின் உடல் தற்பொழுது பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

#image_title

தற்பொழுது அண்ணாசாலை தீவுத்திடலில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு புறப்பட உள்ளது.  கேப்டனின் இறுதி ஊர்வலத்திற்காக 6 முதல் 7 லட்சம் செலவில் பூக்கள் கொண்டு இறுதி ஊர்வல வண்டி தயாராகி வருகிறது. இதற்கான மொத்த செலவையும் மாநகராட்சியே ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top