“அவன் குடும்பத்துல யாரையாச்சும் கொல்லுவேன்” அண்ணனின் தற்கொலைக்கு பழிக்கு பழி… தந்தையால் பறிபோன மகளின் உயிர்… தம்பி வெறிச்செயல்..!!

Spread the love

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சென்மபசப்பா. இவர் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றில் தொழிற்சங்க தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மகள் பாக்கியஸ்ரீ . 20 வயதான இவர் இன்னும் ஒரு மாதத்தில் பெங்களூரில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர இருந்த நிலையில் கடத்த 11 ஆம் தேதி பாக்கியஸ்ரீயும், அவருடைய அக்காளும் வழக்கம் போல நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது  பாக்கியஸ்ரீயின் அக்கா மளிகை கடையில் பொருள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அவருக்காக கடைக்கு வெளியில் பாக்கியஸ்ரீ காத்துக் கொண்டிருந்தார்.  திரும்பி வந்து பார்த்தபோது பாக்கிய ஸ்ரீ கடைக்கு வெளியில் இல்லை. பின்னர் வீட்டிற்கு சென்ற பார்த்தபோதும் இல்லை. திடீரென்று மாயமாகியுள்ளார். இதனை அடுத்து பாக்கியஸ்ரீ தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வந்த நிலையில் நேற்று காலை  சிமெண்ட் தொழிற்சாலையின் அருகில் உள்ள கால்வாயில் பாக்கியஸ்ரீ உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவருடைய உடலில் காயங்களும் இருந்துள்ளது. மேலும் அவரை யாரோ இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை சடலத்தை பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மஞ்சுநாத் என்பவர் பாக்கியஸ்ரீயை கொன்றது தெரியவந்தது. அவரிடம் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

அதாவது மஞ்சுநாத்தின் அண்ணன் வினோத் சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு பணி நிரந்தரம் செய்யவிடாமல் தொழிற்சங்க தலைவர் பாக்யஸ்ரீ தந்தை  சென்மபசப்பா தடுத்துள்ளா.ர் இதுகுறித்து வினோத் தன்னுடைய குடும்பத்திடம் கூறி புலம்பி வந்துள்ளார். இதனால் மணமுடைந்த வினோத் தற்கொலை செய்துள்ளார். தன்னுடைய அண்ணன் தற்கொலைக்கு  சென்மபசப்பா காரணம் என்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவரை கொலை செய்வேன் என்றும் மஞ்சுநாத் கூறி வந்துள்ளார் . இதனால் தன்னுடைய அண்ணனின் தற்கொலைக்கு காரணமான சென்மபசப்பாவை பழிவாங்க அவருடைய மகளை கடத்திச் சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

3 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

4 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago