“கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம்”… கை, கால்கள் கட்டப்பட்டு முகத்தில் குத்தி கிழித்து கொலை.. அதிர்ந்து போன போலீசார்…!

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி தெற்கு களம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி 40 வயதான சிவரஞ்சனி. சுரேஷ் திருச்சியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் விகாஷ் (23) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கணவர் மற்றும் மகன் இருவரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததால், சிவரஞ்சனி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளைச் செய்யும் சிவரஞ்சனி, நேற்று வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து அவரைப் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, வீட்டின் அருகே இருந்த கரும்புத் தோட்டத்தில் சிவரஞ்சனி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறினர்.

சிவரஞ்சனி உடலில் ஆடைகள் ஏதுமின்றி, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். கொலையாளிகள் நாடா கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கியும், முகம் மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் ‘குறிஞ்சி’ மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கரூர் மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், சிவரஞ்சனி அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்ததால், இது நகைக்காக நடைபெற்ற கொலை அல்ல என்பது தெரியவந்துள்ளது. தனியாக இருந்த பெண்ணைக் குறிவைத்து யாராவது முன்விரோதம் காரணமாக இந்தக் கொலையைச் செய்தனரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago