சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத ஆண் சடலம் குறித்த கொடூரக் கொலை வழக்கை, துணிகரமான முறையில் போலீசார் துப்பறிந்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபரின் ஆடையில் இருந்த ஒரு சிறிய பார்கோடு (Barcode) துணியைக் கொண்டு, தீவிர விசாரணை நடத்திய ரயில்வே மற்றும் தனிப்படை போலீசார் கொலையாளிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரக் கொலைக்குப் பின்னால் இருந்த அதிர்ச்சி பின்னணியும் போலீஸ் விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. அமீர் அலியின் இரண்டாவது மனைவியான ரோகிமா என்பவருக்கும், அஷ்ரப் என்ற நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்களது கள்ளக்காதலுக்கு அமீர் அலி இடையூறாக இருந்ததால், ரோகிமாவும் அவரது கள்ளக்காதலன் அஷ்ரப்பும் இணைந்து திட்டமிட்டு அமீர் அலியை மிகக் கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை ரயில் நிலையத்தில் வீசிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு யலஹங்காவில் 13 வயது சிறுவன் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக்…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…
புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…