ரயில் நிலையத்தில் “தலையில்லா சடலம்” மர்மம் விலகியது… காட்டிக்கொடுத்த துணியில் இருந்த சிறிய பார்கோடு… சிக்கிய மனைவி..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத ஆண் சடலம் குறித்த கொடூரக் கொலை வழக்கை, துணிகரமான முறையில் போலீசார் துப்பறிந்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபரின் ஆடையில் இருந்த ஒரு சிறிய பார்கோடு (Barcode) துணியைக் கொண்டு, தீவிர விசாரணை நடத்திய ரயில்வே மற்றும் தனிப்படை போலீசார் கொலையாளிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரக் கொலைக்குப் பின்னால் இருந்த அதிர்ச்சி பின்னணியும் போலீஸ் விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. அமீர் அலியின் இரண்டாவது மனைவியான ரோகிமா என்பவருக்கும், அஷ்ரப் என்ற நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்களது கள்ளக்காதலுக்கு அமீர் அலி இடையூறாக இருந்ததால், ரோகிமாவும் அவரது கள்ளக்காதலன் அஷ்ரப்பும் இணைந்து திட்டமிட்டு அமீர் அலியை மிகக் கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை ரயில் நிலையத்தில் வீசிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.