மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள எம்.ஒய். அரசு மருத்துவமனையில், முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக 12 வயது சிறுவன் ஆதர்ஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அருகில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், சிறுவனைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் கிடைக்காததால், பெற்றோர் வேறு வழியின்றி தங்கள் மகனை ஒரு ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து தள்ளிக்கொண்டே மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.
மருத்துவ ஊழியர்கள் யாரும் உடன் வராத நிலையில், சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சிறுவனின் தந்தை ஸ்டிரெச்சரைச் சாலையில் இழுத்துச் சென்றார். பின்னால் வந்த தாய், வெயிலின் தாக்கத்திலிருந்து தன் மகனைப் பாதுகாக்கத் தனது சேலையின் நுனியைத் தண்ணீரில் நனைத்துச் சிறுவனின் முகத்தில் போர்த்தியபடி கண்ணீருடன் நடந்து வந்தார். ஆனால், உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சிறுவனைச் சோதித்துவிட்டு, மீண்டும் எம்.ஒய். மருத்துவமனைக்கே கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த முறையும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அந்த பெற்றோர் மீண்டும் மகனை ஸ்டிரெச்சரிலேயே வைத்து எம்.ஒய். மருத்துவமனைக்கு இழுத்துச் சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது.
நெஞ்சை உலுக்கும் இந்த அவல நிலை குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஒய். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…
காசியாபாத் ராஜ்நகர் KW ஸ்ருஷ்டி குடியிருப்பில் செப்டம்பர் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கிழிந்த ஆடைகளுடன் அழுதுகொண்டே சுற்றித்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்தநகர் பகுதியில், பக்கத்து வீடுகளுக்கு இடையே வைஃபை இன்டர்நெட் இணைப்பு அமைப்பது மற்றும் கீழே விழுந்து…
மாதவிடாய் காலத்தில் தனது மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காமல், காற்று புகாத குறுகிய அறை போன்ற இடத்தில் அடைத்து வைத்து, பாத்திரங்கள்…
கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…