“தைரியம் இருந்தா தனியா நில்லுங்க” சாணக்ய தந்திரமா..? சீட் பேரமா..? பிரேமலதாவுக்கு புளூ சட்டை மாறன் விடுத்த ஓப்பன் சேலஞ்ச்..!!

Spread the love

தேமுதிக-வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (X) தளத்தில் அக்கட்சியைச் சாடிப் பதிவிட்டுள்ளார். “கொள்கை என்று ஒன்று இருந்தால் இந்நேரம் பொருத்தமான கூட்டணியில் இணைந்திருப்பீர்கள்; பொங்கலுக்குப் பிறகு அறிவிப்பு என்றீர்கள், பொங்கல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் எந்த அறிவிப்பும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சாணக்ய தந்திரம் அல்ல என்றும், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் யார் அதிக இடங்களைத் தருகிறார்களோ அங்கு இணையவே இந்தக் காத்திருப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மக்களுக்கு உங்கள் கூட்டணி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று கூறியுள்ள அவர், தேமுதிக-வின் செல்வாக்கை நிரூபிக்க முடிந்தால் தைரியமாகத் தனித்துப் போட்டியிடுமாறு சவால் விடுத்துள்ளார். திராவிடக் கொள்கை என்றால் திமுக-வுடனும், ஆரியம் என்றால் அதிமுக-பாஜக கூட்டணியுடனும் சேர வேண்டியதுதானே, இதற்கு ஏன் இத்தனை காலதாமதம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “தேமுதிக துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஒரு நகைச்சுவை” என்று பதிவிட்டுள்ள அவர், நடப்பதைப் பார்த்தால் தேர்தல் முடிந்த பிறகுதான் கூட்டணி அறிவிப்பு வரும் போலிருக்கிறது எனத் தேமுதிக-வின் அரசியல் நகர்வுகளைக் கிண்டலடித்துள்ளார்.
Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

1 மணத்தியாலம் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

1 மணத்தியாலம் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

1 மணத்தியாலம் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

1 மணத்தியாலம் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

1 மணத்தியாலம் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

1 மணத்தியாலம் ago