Connect with us

CINEMA

இந்த பிரபலங்கள் மட்டும் தான் தமிழ் சினிமாவில் ஆண்மகன்கள்.. மற்றவர்கள் எல்லாம்… ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு..

திரையில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். ஊதா கலரில் மட்டுமே சட்டை அணிந்து ஒரு படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது குறித்து கூறி வந்ததால், பின்னாளில் அவரது பெயர் ப்ளூ சட்டை என மாறியது. ஆரம்பத்தில் மிகவும் நேர்த்தியாக, நாகரீகமாக விமர்சனம் செய்து வந்த மாறன், போக போக, மிகவும் கீழ் தரமாக படங்களை விமர்சனம் செய்யத் தொடங்கினார். ஒரு படி மேலே சென்று அப்படத்தில் நடித்த நடிகர்களின் உருவங்களை நேரடியாக கேலி செய்யும் அளவுக்கு சென்றார். இதனால் அவர் மீதான எதிர்ப்புகள் அதிகரிக்க செய்தது.

#image_title

   

பிறகு இவர் பணம் வாங்கிக் கொண்டு தான் ஒரு படத்தை பற்றி நல்ல கமெண்ட் சொல்லுவார் என்றளவு தனது பெயரை கெடுத்துக் கொண்டார். இந்த நிலையில், சமீபமாக படங்களை தவிர்த்து அரசியல் நகர்வுகளிலும் தனது கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார் ப்ளூ சட்டை. இயக்குநர், நடிகர் பார்த்திபன் உடனான கருத்து மோதல், நடிகர் ரஜினிகாந்தை சங்கி எனக் கூறியது என தொடர்ந்து பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் பதிவிட்ட கருத்துகள் விஜய் தொடங்கி இயக்குநர் வெற்றி மாறன் வரை பலரையும் டேமேஜ் செய்துள்ளது.

திரையுலகில் எஞ்சியிருக்கும் ஆண்மகன்கள்:

பாமர மக்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் தரும் இந்திய திரைக்கலைஞர்கள் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்துவிட்டது. இவர்களில் பலர் ஆன்மீக அரசியல் ஆதாயம் தேடி ஒரே கூடாரத்தில் இடம் பெயர்ந்துவிட்டனர். மற்றவர்கள் மாநில அரசுக்கு காவடி தூக்குகிறார்கள்.

முன்பெல்லாம் தேசிய அளவிலும், தமிழகத்திலும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் வந்தாலோ அல்லது வெறுப்பரசியல் இருந்தாலோ… கமல், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் பொங்கி எழுவார்கள். ஆனால் இப்போது அப்படி செய்தால் தங்களது பான் இந்தியா பட வியாபாரம் நட்டுக்கொள்ளும் என்பதால்… அவர்களும் ஆஃப் ஆகி விட்டார்கள்.

சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சமுத்திரக்கனி, விஜயசேதுபதி போன்றோர் மக்களுக்காக பேசிய காலமெல்லாம் மலையேறி விட்டது. அப்படியே பேசினாலும் ஒப்புக்கு சப்பாக பேசிவிட்டு நழுவி விடுவார்கள். பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்புகளுக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. மக்களாவது… மாங்காயாவது. ‘உன் வேலை ஓட்டு போடுவது மட்டுமே?’ என அரசியல்வாதிகள் நினைப்பது போல…

#image_title

‘உன் வேலை என் படத்துக்கு டிக்கட் எடுப்பது மட்டுமே? மற்றபடி நீ யாரோ… நான் யாரோ’ என்பதுதான் உறுதியான நிலைப்பாடு. ஆக.. கோடம்பாக்கத்தில் மிஞ்சியிருப்பது பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் மட்டுமே. இவர்கள் கூட பெரும்பாலும் மத்திய அரசுக்கு எதிராக பேசுகிறார்களே தவிர… மாநில அரசுக்கு எதிராக பேசுவதில்லை.

கர்நாடகத்தில் பிரகாஷ் ராஜ், கிஷோர், கிரிக்கெட்டில் தோனி என மிச்சம் இருக்கிறார்கள்.
‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு’ எனும் அரசியல் சாசன முகப்பு பக்கத்தை தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு ஒற்றுமையை வெளிப்படுத்தியது மலையாள திரைத்துறை. அவர்களில் கூட பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே.. சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் இனி பாமர, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக திரையில் மட்டும் குரல் தந்து கல்லா கட்டுவார்கள். நிஜத்தில் ஆன்மீக அரசியல் பக்கம் மட்டுமே நிற்பார்கள். சினிமா நடிகர்கள் எதற்காக மக்கள் பிரச்னைக்கு குரல் தர வேண்டுமென சிலர் கேட்பதுண்டு. அவர்களிடம் இரண்டு கேள்விகள்:

1. அப்படியெனில் இதற்கு முன்புவரை ஏன் குரல் கொடுத்தார்கள்?

2. ஒரு சில வருடங்களில் இவர்களை பெருங்கோடீஸ்வரரர்களாக ஆக்கும் மக்களுக்காக பேசுவதுதான் நியாயம்? பேச முடியாது என்றால் படத்திலும் தம் கட்டி வசனம் பேச வேண்டாம். காதல், காமடி, பேய் படங்களை மட்டும் எடுக்க வேண்டியதுதானே?

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top