Categories: சினிமா

பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் போட்டு ரசிகர்களை திகைக்க வைத்த ரவீந்தர்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா இருக்கும் நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர்.

போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க்கும் நிறைவடைந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ரயான் பைனலுக்குள்  நுழைந்துள்ளார்.  இந்த நிலையில் முந்தைய சீசன்களை போலவே ஷோவின் இறுதிக்கட்டத்தில் முன்பு எலிமிமினெட் ஆன போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.  அதாவது சாச்சனா, தர்ஷாகுப்தா ,அர்னவ், சிவகுமார், ரவீந்தர் சந்திரசேகர், ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் தான் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். இவர்கள் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களுடன் மோத உள்ள நிலையில், ஒருவேளை வைல்டு கார்டு போட்டியாளர்கள் வெற்றிபெற்றால் இருவர் ரீபிலேஸ் செய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த வாரம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் பாட்டு ஒலிக்கும் போது அனைவரும் தங்கள் டாஸ்கை செய்ய வேண்டும். அதன்படி போட்டியாளர் ரவீந்தருக்கு பாட்டு ஒலிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னால் முயன்ற அளவுக்கு ஆடியுள்ளார். அவருடைய இந்த ஆட்டம் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் இயக்க வைத்துள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago