அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் ஆங்கிலம் தெரியவில்லை என்ற ஒரு விஷயத்தினால் எல்லோரும் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க யோசிக்கலாம். ஆனால் தற்போது தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசாங்க வேலைக்கு நீங்கள் அப்ளை செய்து சேர முடியும். அதை பற்றி இனி காண்போம்.
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டு இருக்கிறது. தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் மாத தொகுப்பூதிய முறையில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ் எழுத படித்த தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட தர ஆலோசகர், பல் மருத்துவ உதவியாளர், ஆய்வக உதவியாளர், நுண்கதிர்வீச்சாளர், செவிலியர், வாகனத் துலக்குநர், காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பல்நோக்கு பணியாளர் ஆகிய இடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, கல்வி தகுதி, போன்றவற்றை அரசு வேலை வாய்ப்பு இளையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு தகுதிக்கு ஏற்ற சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூபாய் ₹8,500 முதல் அதிகப்படியாக ரூபாய் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…