முகேஷ் அம்பானி அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்தியாவில் மிகவும் பணக்காரர்களில் ஒருவர்தான் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர். பல பிசினஸ்களுக்கு சொந்தக்காரர். மிகவும் Successful Businessman ஆக வலம் வந்து கொண்டிருப்பவர்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலிலும் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார். 2025 ஆம் ஆண்டிற்கான Forbes வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தனது இடத்தை தக்க வைத்திருக்கிறார். அதாவது இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி மறுபடியும் பிடித்திருக்கிறார்.
அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக Forbes பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் தற்போது 271 பில்லியனர்கள் இருக்கின்றார்கள். அதில் 84 பேர் புதியவர்கள் ஆவர். இந்த நிலை வர வர அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 95. 4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி 62.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் 42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஷிவ் நாடார் இடம் பிடித்திருக்கிறார் மற்றும் பிற இடங்களை சாவித்திரி ஜென்டால் குடும்பம், திலீப் சங்குவி, சிரஸ் பூனவல்லா, குமார் பிர்லா, சுசால் பால் சிங், ரவி ஜெயப்பூரியா, ராதா கிருஷ்ணன் தமனி ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…