Connect with us

CINEMA

படத்துல நடிச்சுருக்கிறாரா பிக் பாஸ் நிக்சன்…? அதுவும் இந்த முன்னணி நடிகரின் படத்துலயா..? இணையத்தில் படுவைரலாகும் வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  துவங்கியது. இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்டனர். ஆக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தையும் நெருங்கி வருகிறது.

   

தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் நிக்சன். இவர் ஐஷுவிடம் அவ்வப்பொழுது எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வந்தார். இருவரும் காதலிப்பதாக ஒரு லவ் ட்ராக்கை ஓட்டி வந்தனர். இதைத்தொடர்ந்து ஐஷுவும் வெளியேற்றப்பட்டார்.

இதோடு மட்டுமின்றி நிக்சன் வினுஷாவை body shaming செய்து ஐஷுவிடம் பேசியிருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால் கமலஹாசன் இதுதொடர்பாக தற்பொழுது வரை அவரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. இப்படி தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில்  அறிமுகமில்லாத ஒரு நபராக நுழைந்த இவர் மிகப் பிரபலமாகி இறுதி கட்டத்தையும் எட்டி இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் உள்ளார்.

இந்நிலையில்  நிக்சன் நடித்திருக்கும் படம் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘திமிரு பிடித்தவன்’ படத்தில் நிக்சன் நடித்துள்ளார். இந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..

Continue Reading

More in CINEMA

To Top