என்ன வரு டேட்டிங்கா..! வருங்கால கணவருடன் சுற்றி திரியும் வரலட்சுமி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on மே 15, 2024

Spread the love

பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாரின் மகள் என்று அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். பின்னர் தன்னுடைய சிறப்பான நடிப்பால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கின்றார்.

   

பள்ளி படிக்கும் காலத்தில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதனைத் தவிர விட்ட வரலட்சுமி பின்னர் விக்னேஸ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பாராட்டைப் பெற்ற வரலட்சுமி பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கினார்.

   

 

பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தின் மூலமாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஹீரோயினாக மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசதி இருந்தார். அதிலும் சண்டக்கோழி 2, சர்க்கார் உள்ளிட திரைப்படங்களில் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக வெளிப்படுத்தும் நடிகை என்கின்ற பெயரை பெற்றார்.

விஷாலை காதலித்து வந்த இவர் பின்னர் பிரேக்கப் செய்து கொண்டார். தற்போது தன்னுடைய 14 வருட நண்பனான நிக்கோலை என்பவருக்கும் வரலட்சுமிக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் நிச்சயம் நடைபெற்றது. விரைவில் இவர்கள் திருமணம் செய்ய உள்ளனர். ஆனால் திருமணம் குறித்து தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் காதலருடன் டேட்டிங் அவுட்டிங் என்று சுற்றிவரும் வரலட்சுமி தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்த தம்பதிகளுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.