விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சி நடந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனின் டைட்டில் வின்னரானவர் தான் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளாக கலக்கி வருகின்றனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா இவர் மீது தீராத காதல் கொண்டிருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் இவர் நடிகை ராகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ராகி கெளதம் இயக்கத்தில் உருவாகி வரும் உருவான ‘இமைப்போல் காக்க’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து கூறினர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் மூலமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ‘மார்க்கெட் ராஜா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.
மேலும் கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மீண்டு மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆரவ் – ராகி ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்பொழுது ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் ஆரவ் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு…..
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…