தமிழ் சினிமாவின் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சித்தார்த். . இவர் நடிப்பில் தற்பொழுது சித்தா படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது. படத்தை ப்ரோமோஷன் செய்ய சித்தார்த் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் கூட அவர் நடித்து ப்ரொமோஷன் செய்திருக்கிறார். சித்தா பட ப்ரோமோஷனில் பெங்களூரில் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம்.
‘சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் சித்தா. ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு, உணர்வுகள்தான் கதை.தமிழ்நாடு முழுவதும் சித்தா திரைப்படம் திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமூக அக்கறை இப்படத்தில் கலந்திருப்பதால் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டும். என்றும், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் படத்தில் கூறியிருப்பதாகவும் பேட்டி கொடுத்திருந்தார் நடிகர் சித்தார்த்.
இந்நிலையில் மதுரையில் சித்தா படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்பொழுது , ‘சித்தா திரைப்படத்தில் மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரம் நடிகை சித்ராவின் கதாபாத்திரம். நான் மட்டும் சித்தா படத்தின் ஹீரோ அல்ல. இப்படத்தில் நல்லது செய்ய வேண்டும் என நடித்த அனைவருமே ஹீரோக்கள் தான். ‘ஆட்டோ நகுந்துச்சுன்னா அவ்ளோ தான்’ என அவர் பேசிய அந்த வசனம் இன்று மக்களால் கொண்டாடப்படுகிறது’ என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய நடிகை சித்ரா ‘ 17 வருஷங்கள் திரைத்துறையில் தான் நடித்துக் கொண்டிருப்பதாகவும் , சித்தா படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கண்ணீருடன் கூறினார். இதோ அந்த வீடியோ…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…