“என்னோடு வாழாட்டி யாரோடும் வாழவிடமாட்டேன்”…. நள்ளிரவில் ஜன்னல் வழியாக நுழைந்த நபர்… சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!

Spread the love

சென்னை அனகாபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக, இளம் தாய் ஒருவர் அவரது அத்தை மகனால் பெப்பர் ஸ்பிரே அடித்து, கத்தியால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ரேஷ்மா (29) என்பவருக்கு அசோக் என்ற கணவரும், இரு குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து, சென்னை அனகாபுத்தூர் சத்யா நகரில் தனது 8 வயது மகள் யாத்திகாவுடன் ரேஷ்மா வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தச் சூழலில், ரேஷ்மாவின் அத்தை மகனான விஜி (30) என்பவர் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். சமீபகாலமாக ரேஷ்மா அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததால் ஆத்திரமடைந்த விஜி, “என்னுடன் வாழவில்லை என்றால், யாருடனும் வாழ விடமாட்டேன்” எனச் சில தினங்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

விஜியின் இந்த மிரட்டலால் அச்சமடைந்த ரேஷ்மா, தனக்குத் துணையாகத் தனது தோழி மரியா மற்றும் அவரது சகோதரி ஜெனிபர் ஆகியோரைத் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த விஜி கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்தவர்கள் பயந்துபோய் கதவைத் திறக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த விஜி ஜன்னல் வழியாகக் கையை விட்டு வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளார். உடனே தான் மறைத்து வைத்திருந்த ‘பெப்பர் ஸ்பிரே’வை அங்கு இருந்தவர்கள் மீது அடித்து நிலைகுலையச் செய்த விஜி, கத்தியால் ரேஷ்மாவின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த ரேஷ்மா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர், ரேஷ்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கொலையாளி விஜியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட பிறகே இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மை விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

விஜய் போட்ட கையெழுத்து… பின்னால் நடக்கும் ரகசிய டீலிங்… தவெகவை அதிரவைக்கும் அந்த ஒரு நபர்…!

தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…

6 seconds ago

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

23 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

24 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

33 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

41 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

47 minutes ago