இட்லி, தோசை விற்றே கோடிகளில் சம்பாதிக்கும் தம்பதி.. இது தான் இவங்க பிஸ்னஸ் சீக்ரெட்-ஆ?

By John

Updated on:

Rameshwaram cafe

ஹோட்டல் தொழில் என்பது யானையைக் கட்டி இழுக்கும் கதைதான். தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். மேலும் தரமும், சுவையும் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும். அப்படி இல்லையேல் நம் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டார்கள். ஆனால் சாதாராண இட்லி, தோசையை மட்டும் வைத்து ராமேஸ்வரம் கஃபே என சைவ உணவமாக ஆரம்பித்து இன்று மாதம் கோடிகளில் சம்பாதித்து தங்களுடைய ஹோட்டலை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி இருக்கின்றனர்.

Collage Maker 12 Jul 2023 07 54 PM 3773

பெங்களூரில் ஆரம்பித்த முதல் 3 வருடத்திலேயே தங்களுடைய தனித்தன்மையான சுவையால் உணவுப் பிரியர்களைக் கவர்ந்து இன்று 4 -5 கிளைகள் ஆரம்பித்து ஆண்டுக்கு 50 கோடிக்கு கல்லா கட்டுகின்றனர். இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என்று பார்ப்போம்.

   

திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த கஃபே 2021 இல் பெங்களூரு இந்திராநகர் பகுதியில் தனது முதல் கிளையுடன் தனது பயணத்தைத் தொடங்கியது. “மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா” வின் நடுவர்களில் ஒருவரும், உலக அளவில் போற்றப்படும் சமையல்காரருமான கேரி மெஹிகன்,  ராமேஸ்வரம் கஃபேயில் தோசைகளை ரசித்துச் சாப்பிட்டு ரிவியூ போட அந்த ​​உணவகம் சமீபத்தில் கவனத்தை ஈர்த்தது.

இதில் திவ்யா, ஐஐஎம் அகமதபாத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். இருப்பினும், ராகவேந்திரா 15 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுத் துறையில் பணியாற்றி வருகிறார், சேஷாத்ரிபுரத்தில் உணவு வண்டியில் தோசை மற்றும் இட்லிகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

Rameshwaram cafe
rameshwaram cafe

சந்தன மரத்துக்கே சவால் விடும் விலை கொண்ட மரம்.. உலகிலேயே அதிக விலைமதிப்புடைய ‘அகர்‘ மரம் பற்றி தெரியுமா..?

உணவகத்தின் துவக்கம் மற்றும் விரிவாக்கம் குறித்து  தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டுள்ளார், அதில் ராவேந்திர ராவ மற்றும் திவ்யா இருவரும் மக்களுக்கு சுவையான உணவை வழங்க விரும்பியதோடு தற்போது 200 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஒரு சமூக தாக்கத்தையும் உருவாக்கியுள்ளனர் என்றே கூறலாம்.

பெங்களூரில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் ராமேஸ்வரம் கஃபே ஒருக்கும் இடத்தை பார்த்தாலே கூட்டம் அலைமோதும். சில சமயங்கள் சாலை வரையிலும் கூட்டம் இருப்பதை காண முடியும். அப்படியென்ன ஸ்பெஷல் என்றால் கமகமக்கும் உணவுகள், தென்னிந்திய உணவுகளை மக்கள் அதிக விரும்புவது, உணவகத்தின் கமகமக்கும் காஃபி என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

Rameshwaram cafe
rameshwarm

கன்னட மக்களின் நாக்கை தங்களது சுவையால் அடிமைப்படுத்திய ராமேஸ்வரம் கஃபே தற்போது தெலுங்கு மக்களைக் கவர ஹைதராபாத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தின் பெயரையே தங்கள் ஹோட்டலுக்கும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.