தெற்கு கலிபோர்னியாவில் ஒரு பெண்ணுக்கு 10 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கருப்பை கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டனர். இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண கர்ப்பத்தில் கருப்பைக்குள்ளே குழந்தை வளரும். ஆனால், இந்த வழக்கில் கருமுட்டை கருப்பைக்கு வெளியே, வயிற்றுப் பகுதியில் உள்ள திசுக்களில் ஒட்டிக்கொண்டு வளர்ந்துள்ளது. இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது. அந்தத் தாய்க்கு வயிறு பெரியதாக இருந்ததால், மருத்துவர்கள் முதலில் அது ஒரு பெரிய கருப்பைக் கட்டி என்றுதான் நினைத்தனர்.
ஸ்கேன் பரிசோதனையிலும் குழந்தை இருப்பது ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை. 10 கிலோ எடையுள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோதுதான், அதன் பின்னால் ஆரோக்கியமான ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் திகைத்துப் போயினர். பொதுவாக கருப்பைக்கு வெளியே வளரும் குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். ஆனால், இந்த 8 பவுண்டு எடையுள்ள ஆண் குழந்தை எந்தவித பாதிப்பும் இன்றி பிறந்தது ஒரு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. நவீன மருத்துவ உபகரணங்கள் இருந்தபோதிலும், இயற்கையின் சில நிகழ்வுகள் மருத்துவர்களுக்கே சவாலாகவும் ஆச்சரியமாகவும் அமைகின்றன. அந்தத் தாயும் குழந்தையும் நலமுடன் இருகிறார்களாம்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…