Connect with us

CINEMA

பாட்ஷா படம் சூப்பர்ஹிட் தெரியும்… ஆனா அந்த படத்தால ஒருத்தருக்கு அமைச்சர் பதவி போனது தெரியுமா?

கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டது. அதில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது பாட்ஷா திரைப்படம். அந்த படத்தின் வெற்றியால் அதே திரைக்கதை பார்மட்டில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு நடிகர்களை வைத்து உருவாகின.

இந்த படத்தைத் தயாரித்தது சத்யா மூவிஸ் ஆர் எம் வீரப்பன். இவர் எம் ஜி ஆரோடு தன்னுடைய சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். எம் ஜி ஆரின் அன்னை சத்யபாமா பெயரில் சத்யா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அவரை வைத்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்த போது அவர் கட்சியில் சேர்ந்து அமைச்சராகவும் இருந்தார்.

   

எம் ஜி ஆர் இறந்தபோது அடுத்த முதல்வர் ஆர் எம் வீரப்பன்தான் என சொல்லும் அளவுக்கு அவரின் மதிப்பு இருந்தது. ஆனால் அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரோடு பயணித்தார். ஜெயலலிதா முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு முதல்வரான போது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

அப்போதுதான் 1995 ஆம் ஆண்டு பாட்ஷா படத்தை ஆர் எம் வீரப்பன் தயாரித்தார். இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஜெயலலிதா ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. ரஜினிக்கும் அரசியல் ஆர்வம் துளிர்விட்ட காலம்.

அப்போது அந்த மேடையில் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சிக்கும் விதமாக ரஜினி பேசினார். அந்த படத்தின் தயாரிப்பாளரான ஆர் எம் வீரப்பன் அதற்கு எதிர்வினையாற்றவேயில்லை. இதனால் ஆர் எம் வி மேல் கோபமான ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அதன் பிறகு ஆர் எம் வி தனியாக ஒரு கட்சி தொடங்கி அரசியலில் இருந்து காணாமலே போனார்.

Continue Reading

More in CINEMA

To Top