“ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு ஜாக்பாட்… ஆயுஷ்மான் திட்ட உதவிகள் கிடைக்கும்… மேற்கு வங்க அரசின் அதிரடி அறிவிப்பு…!!”

Spread the love

மேற்கு வங்க மாநிலத்தில் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த ‘ஆயுஷ்மான் பாரத் – பிஎம்ஜேஏஒய்’ திட்டம், அங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டம் முறைப்படி தொடங்கப்பட்டதன் மூலம், முதலமைச்சரின் முக்கிய வாக்குறுதி ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு 976 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 1.5 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அனைவருக்கும் பொதுவானது அல்ல பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டுமே இதன் பலன்கள் கிடைக்கும். மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி, ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’, ‘சிறப்பு முன்னுரிமைப் பிரிவு’ மற்றும் ‘முன்னுரிமைப் பிரிவு’ ஆகிய குறிப்பிட்ட டிஜிட்டல் ரேஷன் கார்டுகளைக் கொண்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்கள் ஆவர். எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனாளிகளின் ஆவணங்களைச் சரிபார்த்து உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே, மத்திய அரசின் காப்பீட்டுப் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும்.

முன்பு இருந்த மாநில சுகாதாரத் திட்டங்கள் மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட்ட நிலையில், இந்த ஆயுஷ்மான் பாரத் அட்டை மூலம் வெளிமாநிலங்களிலும் சிகிச்சைகளைப் பெற முடியும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நோயாளிகள் அதிகம் செல்லும் வேலூர் சிஎம்சி, சென்னை மற்றும் டெல்லி மருத்துவமனைகள், அப்பல்லோ, டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத் சங்கர நேத்ராலயா போன்ற முன்னணி மருத்துவமனைகளில் இதன் மூலம் பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள், நரம்பியல் அறுவை சிகிச்சை, தாய் – சேய் நலச் சேவைகள், அவசரக்கால அறுவை சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் பரிசோதனைகளுக்கான செலவுகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.

Swetha

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago