திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ராஜீவ் காந்தி நகர் 7வது தெருவை சேர்ந்த ஜேசிபி டிரைவரான கிருஷ்ணா (26) என்பவருக்கு காந்தமேரி என்ற மனைவியும், மூன்று வயதில் லோகேஸ்வரி என்ற மகளும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் காந்தமேரியின் தாயார் சொர்ணாவுடன் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நேற்று மாலை மூத்த மகளை பால்வாடியில் இருந்து அழைத்து வந்த காந்தமேரி வீட்டுக்கு திரும்பிய போது ஹாலில் இருந்த தண்ணீர் வாளிக்குள் 8 மாத குழந்தை தலைக்குப்புற விழுந்து கிடந்தது.
உடனே அதிர்ச்சி அடைந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை கவனித்து வந்த சொர்ணா தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…