உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால்.. பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் போட்ட உருக்கமான பதிவு..!!

By Nanthini

Published on:

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.

   

 

நகரத் தெருக்களில் சூழ்ந்துள்ள மழை நீர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. தற்போது சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னையின் பலப் பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பற்றி தான் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். தேவைப்பட்டால் உயரமான இடத்தில் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால் நிவாரணம் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதை பரிசீலிக்கவும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்று படுவோம் என கூறி ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

David Warner இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@davidwarner31)

author avatar
Nanthini