Categories: சினிமா

“அவமானமா இருக்கு…” உடல் எடை பற்றி தெரிந்து என்ன செய்ய போறீங்க…? பத்திரிக்கையாளரிடம் சீறிய நடிகை…. திடீர் சலசலப்பு…!!

Spread the love

சென்னையில் நடைபெற்ற அதர்ஸ் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷனுக்கும் ஒரு பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் த்ரிஷாவின் இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌரி கிஷன்.

அதன் பிறகு மாஸ்டர், கர்ணன், அடியே, உலகம்மை, ஹாட்ஸ்பாட், போட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அபின் ஹரிகரன் இயக்கத்தில் கௌரி நடித்த அதர்ஸ் படம் நவம்பர் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கௌரி கிஷனிடம் ஒரு பத்திரிகையாளர், கௌரி கிஷனை தூக்கினீர்களே. அவரது உடல் எடை எவ்வளவு என ஹீரோவிடம் கேள்வி கேட்டார்.

இதை அவமானமாகக் கருதிய கௌரி, என் உடல் எடையைத் தெரிந்துகொண்டு என்ன செய்வீர்கள்? ஒருவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது கேள்வியா? நான் நடித்த படத்தைப் பற்றி கேளுங்கள். இது உருவக் கேலி என்று கோபமாக பதிலளித்தார்.

இதைக்கேட்ட பத்திரிகையாளர், நான் வழக்கமாகக் கேட்பதைத்தான் கேட்டேன். உங்களைத் தூக்கினார், கடினமாக இருந்ததா என்பதற்காகக் கேட்டேன். இது சுவாரசியமான கேள்வி. உங்களுக்கு தமிழ் புரியவில்லை. நீங்கள் பூசனது போல் இருந்தீர்கள். தமிழ் சினிமாவில் இப்படித்தான் கேள்விகள் இருக்கும். குஷ்பு, சரிதா போன்றோர் இதை எதிர்கொண்டவர்கள் என்று வாதிட்டார்.

இதற்கு கௌரி, என் எடையைப் பற்றி கேட்டது எனக்கு பிடிக்கவில்லை. படத்தில் என் கதாபாத்திரத்தைப் பற்றி கேட்காமல் எடையைத் தெரிந்துகொள்வது முக்கியமா? இங்கு நான் மட்டுமே பெண். என்னைச் சுற்றி இவ்வளவு ஆண்கள் இருக்கிறீர்கள். உடல்தோற்றத்தை அவமானப்படுத்துவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

நடிகையின் உடல் எடையைத் தெரிந்துகொள்வது அநாகரீகம். இது கேள்வியும் இல்லை, நீங்கள் பத்திரிகையாளரும் இல்லை. உங்கள் துறைக்கே அவமானம் தருகிறீர்கள் என்று கடுமையாக பதிலடி கொடுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்ததால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Devi Ramu

Recent Posts

தங்கம் வாங்க புதிய கட்டுப்பாடு… மத்திய அரசின் புதிய உத்தரவால் நகை வியாபாரிகள் அதிர்ச்சி..!!

தங்கம் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வணிகர்கள் ஒரு உரிமத்திற்கு (License) அதிகபட்சமாக 100…

3 minutes ago

தமிழக முதல்வர் விஜய் மாமா..! “இதுக்கு உடனே ஆக்ஷன் எடுங்க”… நெல்லை சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்..!!

தாமிரபரணி ஆற்றின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்…

5 minutes ago

“அந்த தொழிலதிபர் மூலம் குதிரை பேரம்” அதிமுக பிளவுக்கு காரணம் யார் தெரியுமா..? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட “பாஷ்யம்” குண்டு..!!

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு…

15 minutes ago

கொழுந்தன் மீது மோகம்… தடையாக இருந்த கணவன்… ₹1 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவி மனைவி போட்ட பக்கா ஸ்கெட்ச்.. நடுங்க வைக்கும் பின்னணி…!!!

தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம்…

16 minutes ago

நான் என்ன துரோகம் செஞ்சேன்.. என் பதவியை பறிச்சிட்டாங்களே… கண்ணீர் சிந்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்…

20 minutes ago

“காப்பாற்றுங்கள்!… பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ்?… கண்ணீருடன் கெஞ்சும் குடும்பத்தினர்… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக்…

25 minutes ago