வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு காரணம் என்று விமர்சித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் முதலமைச்சர் ஆவதைத் தடுப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், ஒரு தொழிலதிபரின் உதவியுடன் எடப்பாடி பழனிசாமியுடன் உதயநிதி ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பரபரப்பு புகாரை முன்வைத்தார். திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகவும், இதன் பின்னணியில் பாஷ்யம் நிறுவன உரிமையாளர் புரோக்கர் வேலை பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆளுநர் முட்டுக்கட்டை போட்டபோது ராகுல் காந்திதான் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்குக் கைகொடுத்தார் என்று தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் சூழலைப் புரிந்து கொண்டு விஜய் முதலமைச்சராக டெல்லியில் இருந்து ராகுல் காந்தி முழு ஆதரவு வழங்கியதாகக் குறிப்பிட்டார். செல்வப்பெருந்தகையும் உடனடியாக ஆதரவு நின்றதால் அரசியல் சூழல் மாறியதாகக் கூறிய அவர், தவெக குதிரை பேர அரசியல் செய்யவில்லை என்றும், இது “குதிரை வேக அரசு” என்றும் விஜய்யின் கூற்றை வழிமொழிந்தார். சுமார் 108 தொகுதிகளில் தவெக வென்றுள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
திமுக மற்றும் அதிமுகவின் ரகசியக் கூட்டணியைப் அம்பலப்படுத்திய அவர், திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க உதயநிதி திட்டமிட்டதாகக் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பேபி கூட, திமுகவும் அதிமுகவும் சேர்ந்து பிஜேபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றதைச் சுட்டிக்காட்டியதை அவர் நினைவு கூர்ந்தார். உதயநிதி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ஆகியோர் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையே அதிமுக இரண்டாக உடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
அஜய் என்பவன் திருஷ்டியை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒரு திருமணப் பெண்ணைப் போல அலங்காரம் செய்துகொண்டு படுக்கையறையில் காத்திருக்குமாறு கூறுகிறான். "இதைத்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்றபோது, அவருடன் சென்ற பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி…
ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ்…
தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு…
காதலனை வீட்டிற்கு வரவழைத்த மனைவியால் ஏற்பட்ட விபரீத மோதலில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் காதலனுக்கு மிகக் கொடூரமான தண்டனை அளித்த…
பிரான்ஸ் நாட்டு கிராமப்புறங்களில் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடும் மான்களின் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காடுகளில்…