நான் என்ன துரோகம் செஞ்சேன்.. என் பதவியை பறிச்சிட்டாங்களே… கண்ணீர் சிந்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்..!!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான இரு அணிகளாக கட்சி பிளவுபட்டுள்ள சூழலில், தமிழக முதல்வர் விஜய்யின் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தியடைந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் உத்தரவை மீறியதாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்ட 26 பேரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “நான் இயக்கத்திற்கு என்ன துரோகம் செய்தேன்? எதற்காக எனது பதவி பறிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய அவர், எவ்வித விளக்கமும் கேட்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். தான் எப்போதும் கட்சிக்கும், சின்னத்திற்கும் விசுவாசமாக இருப்பவன் என்றும், தனது உழைப்பிற்கு கிடைத்த பரிசாகவே இந்த பதவி நீக்கத்தைப் பார்ப்பதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின், தான் கடந்த ஐந்து ஆண்டுகள் அமைச்சராகவும், துணை மேயராகவும் ஜெயலலிதாவின் பாராட்டைப் பெறும் வகையில் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்த தனக்கு, தற்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தமக்கு ஆறுதல் கூறிய நிலையில், தற்போது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் முன்னறிவிப்பின்றி பதவியைப் பறித்தது பெரும் மனவேதனையை அளிப்பதாகக் கூறி அவர் கண்ணீர் சிந்தினார்.

Soundarya

Recent Posts

வாட்ஸ்அப் வைத்துள்ளவர்கள் உஷார்..! ஒரு கிளிக் செய்தால் காலி…! ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் பரவும் புதிய ஆபத்து…! மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!

நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…

3 minutes ago

ஷாக்… போன் பேசிட்டே போனவருக்கு நேர்ந்த கொடூரம்…! திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்து பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…

8 minutes ago

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

30 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

35 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

37 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

39 minutes ago