Connect with us

CINEMA

இதானால் தான் குடும்பத்துடன் மதம் மாறினோம்.. AR.ரஹமான் சகோதரி ரைஹானா கொடுத்த விளக்கம்..

சாதாரண ஒரு மனிதர் மதம் மாறும் போது ஏகப்பட்ட சர்ச்சைகள் ஏற்படும். அப்படியிருக்கையில், ஒரு பிரபலமான நபர் குடும்பத்துடன் மதம் மாறுவது என்பது மிகப்பெரிய பேசுபொருளாக மாறும். அப்படிப்பட்ட நபர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது அக்கா மகன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஜிவி பிரகாஷ் இன்று வரையிலும் இந்து மதத்தை பின்பற்றும் நிலையில், ஏ.ஆர்.ரகுமான் அவரது சகோதரிகள், பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் எப்படி இஸ்லாமாக இருக்க முடியும் என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகிறது.

#image_title

   

திலீப் குமாராக இருந்தவரின் தந்தை சேகர் உடல்நலக் குறைவால் பாதிக்கபட்டப் போது, தர்ஹாவுக்கு சென்று வேண்டியதால் உயிர் பிழைத்து சிறிது காலம் உயிரோடு இருந்ததாகவும், அதனால் இஸ்லாம் மதத்திற்கு திலீப் குமார் மாறி தனது பெயரை ஏ.ஆர்.ரகுமான் என மாற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு அவர் இதுவரையிலும் பெரிதாக விளக்கம் தராத நிலையில், அவரது அக்காவும், ஜி.வி. பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர்.ரைஹானா அளித்துள்ள விளக்கம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மட்டுமின்றி அவரது வாரிசுகள் மற்றும் சகோதரிகளும் அடுத்தடுத்து இசையில் கலக்கி வருகின்றனர்.

#image_title

அந்த வகையில், ஏ.ஆர்.ரைஹானா பின்னனி பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில், தங்களது தந்தை இறந்தபிறகு, குடும்பம் பல கஷ்டங்களை சந்தித்ததாகவும், அந்த சமயத்தில் அவர்களது தாயார் சூஃபிஸத்தில் ஈர்க்கப்பட்டு, பிறகு முழு குடும்பமும் மாறியதாகவும் கூறியுள்ளார். ஆனால் ரைஹானா மட்டும் மதம் மாற கிட்டத்தட்ட 10 வருடங்கள் எடுத்துக் கொண்டதாகவும், 5 வேளை தொழுகை செய்யும் பழக்கத்தை வழக்கமாக 10 வருடங்கள் ஆனதாகவும் கூறியுள்ளார்.

#image_title

தனது பெயரை மாற்ற முற்பட்டப்போது ஷனாஸ் என யோசித்து பிறகு ரைஹானா என்ற பெயர் பிடித்துப் போய் அதனை வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். அப்போதும் கூட ரைஹானா சேகர் என அப்பாவின் பெயரை உடன் சேர்த்து வைத்துக் கொண்ட ரைஹானா, ஏ.ஆர்.ரகுமானின் ஆலோசனைப்படி ஏ.ஆர்.ரைஹானா என வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். ஏ.ஆர் என்றால் (Allah Rakka)எனும் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top