AI (ARTIFICIAL INTELLIGENCE) டிஎஃப் (DEEP FAKE) போன்ற வீடியோக்களால் பிரபலங்கள் சந்தித்து வரும் சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. சாதாரண ஒருவரின் வீடியோவில் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரபலங்களின் முகங்களை பொருத்தி அவர்கள் செய்தாற் போல பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்த டீப் ஃபேக் வீடியோ மூலம், ராஷ்மிகா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
அதேப்போல, பிரதமர் மோடியின் குரலில் தமிழ் பாடல்கள் ஒலிப்பது போன்ற வீடியோக்களும் இணையத்தில் உலா வந்தது. என்ன தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், ஒருவரின் குரல், முகம், கருத்து போன்றவற்றை அவர்களது உத்தரவு இன்றி பயன்படுத்துவது சட்டப்படி தவறு. அப்படி இருக்கையில், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த பாம்பே பாக்யாவின் குரலை எடுத்து வந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர்களது குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த அவர்களது குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெற்று, அதற்கு தகுந்த சன்மானமும் வழங்கி உள்ளோம். தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தினால் ஒருபோதும் அது அச்சுறுத்தலாகவும், தொல்லையாகவும் அமையாது” என தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் வெளியான போது நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
We took permission from their families and sent deserving remuneration for using their voice algorithms ..technology is not a threat and a nuisance if we use it right…#respect #nostalgia ???? https://t.co/X2TpRoGT3l
— A.R.Rahman (@arrahman) January 29, 2024