தமிழக அரசியலில் தற்போதைய சூழலை சில மாதங்களுக்கு அமைதியாகக் கவனித்து, அதற்கேற்ப அடுத்தகட்ட வியூகங்களை வகுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான அக்கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அவசரப்பட்டு எந்தவொரு அதிரடி முடிவையும் எடுக்காமல், கள நிலவரத்தை உன்னிப்பாகக் கவனிப்பதே கட்சிக்கு நல்லது என்ற முடிவுக்கு அமித்ஷா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறுபான்மையினருக்கான அரசியலை முன்னெடுக்கும் திமுகவால், அதிமுகவின் அரசியல் இடத்தை முழுமையாகப் பிடிக்க முடியாது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமித்ஷாவிடம் எடுத்துரைத்துள்ளனர். அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன்பக்கம் இழுப்பது திமுகவிற்கு அவ்வளவு எளிதல்ல என்றும், இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் இடைவெளி நீண்ட கால நோக்கில் பாஜக வளர்வதற்கான ஒரு சாதகமான களத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அரசியல் மாற்றங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், தமிழகத்தில் மாற்றுச் சக்தியாக பாஜக காலூன்ற முடியும் என்ற தகவலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய், தனது உறவினரான குமார் என்பவரின் மகள்…
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு (EPS) தனது முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு…
இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் (Elstree and Borehamwood) நகர சபையின் புதிய மேயராக 23 வயதான துஷார் குமார்…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகேயுள்ள ஈசாகர் பகுதியில் உள்ள ஓடிலா கிராமத்தில், கோலாகலமாகத் தொடங்கப்பட்ட திருமண விழா ஒன்று…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனை குறித்து செய்தி சேகரித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் ஒன்று…
மேட்ரிமோனி தளமான ஷாதி.காம் (Shaadi.com) மூலம் அறிமுகமான பெண்ணுடன் ஏற்பட்ட நட்பால், 50 வயதைக் கடந்த ராம் அவதார் என்பவர்…