பேசித் தீர்க்கலாம்னு கூப்பிட்டு… மகளின் காதலனை துடிதுடிக்க வெட்டி சாய்த்த தந்தை.. கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அரங்கேறிய பகீர் ஆணவக்கொலை..!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய், தனது உறவினரான குமார் என்பவரின் மகள் கனகலெட்சுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் சஞ்சய் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த கனகலெட்சுமியின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்களான மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் காதல்குறித்து பேசித் தீர்ப்பதாகக் கூறி சஞ்சய்யை தங்களோடு அழைத்துச் சென்றுள்ளனர்.

அமைதியாகப் பேசுவது போல் நடித்து, சஞ்சய்யை ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த கும்பல், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்திப் படுகொலை செய்துள்ளது. இக்கொடூரத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆணவக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி போலீசார், சஞ்சய்யைக் கொடூரமாகக் கொலை செய்த காதலியின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்களை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

வீட்டிற்கே வந்த அதிகாரிகள்… தவெக எம்எல்ஏ கனிமொழி செய்த காரியம்… விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி… பதறிய கோவை அரசியல் களம்…!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, கோவை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வென்று அரசியல்…

7 minutes ago

“எனக்கு அந்த நோய் இருக்கு!”… மசாஜ் என்ற பெயரில்61 பெண்களை வேட்டையாடிய இந்திய வம்சாவளி வாலிபர்… குற்றவாளின் பகீர் வாக்குமூலம்…!!!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள '4ever' மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் சுமித்…

11 minutes ago

“காரை நிறுத்து.. நான் போறேன்”…. அடையாறு பாலத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் குதித்த அந்த 5 நிமிட கொடூரம்… ஓட்டுநர் சொன்ன கண்ணீர் வாக்குமூலம்…!

தமிழ் திரையுலகில் எதற்கும் அஞ்சாமல், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் சம்பளப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த மூத்த…

16 minutes ago

“இன்டர்ன்ஷிப்பிற்கே மாதத்திற்கு ₹75,000 சம்பளமா?” சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பும்.. ஐஐடி மாணவர்களின் வைரல் வீடியோ…!!

ஐஐடி டெல்லி (IIT Delhi) மாணவர்களின் சம்பளப் பேக்கேஜ் மற்றும் இன்டர்ன்ஷிப் சம்பளம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்…

19 minutes ago

தவெக-வில் இணைந்த “ரூ.300 கோடி” மோசடி புள்ளி… சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்… CM விஜய் அதிருப்தி…!

சேலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வின்ஸ்டார் சிவக்குமார் என்பவரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான அமைச்சர் கே.ஏ.எஸ்.…

20 minutes ago

“காதலி கண்முன்னே துடிதுடித்த காதலன்!… கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் ஓட ஓட விரட்டி கத்திக்குத்து… நடுங்க வைக்கும் பின்னணி”…!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய் என்பவருக்கும், அண்டை கிராமமான கெச்சிலாபுரத்தைச்…

22 minutes ago