‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பாரா அமீர்..? பல நாள் கேள்விக்கு அவரே சொன்ன ஷாக்கிங் பதில்..

By Archana

Updated on:

இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சூர்யா இடையேயான பிரச்னை என்பது இப்போது ஆரம்பித்தது இல்லை. கிட்டத்தட 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட, பருத்திவீரன் பிரச்னையில் இருவரும் நேருக்கு நேர் அமர்ந்து பேசி எவ்வித முடிவும் எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பிரச்னை மிகப்பெரிய அளவில் உருவெடுத்தது. தயாரிப்பாளர் ஞனவேல் ராஜாவின் அமீர் குறித்தான சர்ச்சை பேச்சு, மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்த நிலையில், வாடிவாசல் படத்தில் இருவரும் ஒன்றாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாகி வருகிறது வாடிவாசல்.

surya

இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக அமீர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இது உண்மையா இல்லையா? பருத்திவீரன் பிரச்னையால் இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பார்களா என பலரும் கூறி வந்த நிலையில், நடிகர் அமீர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள நேர்காணலில், எனக்கும், சூர்யாவுக்கும் நேரடியாக எந்த பிரச்னையும் இல்லை எனவும், அவருடன் வாடிவாசல் படத்தில் நடிப்பதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறியிருக்கிறார். பருத்திவீரன் பிரச்னை தொடர்பாக சூர்யா இன்று வரை தன்னுடன் நேருக்கு நேர் அமர்ந்து பேசியதில்லை எனவும், அவ்வாறு பேசியிருந்தால் அந்தப் பிரச்னை எப்போதோ முடிந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

   
189436 thumb 665 1

ஆனால் பொதுவெளியில் எங்கு பார்த்துக் கொண்டாலும் கைக்குலுக்கி, நட்பு பாராட்டிக் கொள்வது தான் இருவரின் பழக்கம் எனவும், இத்தனை சச்சரவுகளுக்கு மத்தியிலும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு ஆரத்தழுவி கொண்டதாகவும், இந்தப் படத்தில் இருவரும் நடிப்பது என்பது வெற்றிமாறன் முடிவு எனவும், படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக இருந்து தனது பணியை செய்வேன் என கூறியுள்ளார். மேலும் சூர்யாவின் நடிப்புக்கு நான் ரசிகர் எனவும், என்னுடன் தனிப்பட்ட நிலையில் சகோதரனாக அவருடன் பழகி இருப்பதாலும், நடிப்பில் என்னோடு சீனியர் என்பதால், அவருக்கு நெருங்கி நடிக்க முயற்சி செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

surya ameer
author avatar
Archana