Connect with us
ambani

TRENDING

மகன் கல்யாணத்திற்காக தனி காட்டையே உருவாக்கிய அம்பானி.. உலகமே உற்று நோக்கும் அம்பானி வீட்டு திருமணம்

நம்மில் யாராவது சற்று அதிமாக ஆடம்பரம் செய்துவிட்டால் போதும். இவரு பெரிய அம்பானி என்று கிண்டலடிப்பது வழக்கம். இவ்வாறு ஆடம்பரத்திற்குப் பெயர் போன உலகின் டாப் பணக்காரர்களாகத் திகிழும் முகேஷ் அம்பானி வீட்டில் நிகழப் போகும் கடைசி திருமணத்தைப் பற்றித்தான் இப்போது நாடே பேசுகிறது.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில்   குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் வருகிற மார்ச் 1,2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

   

ambani

மூன்று நாட்கள் நடைபெறப் போகும் இந்த நிகழ்ச்சியின் ஹைலட்கள் என்னென்ன தெரியுமா? உலகமே இதுவரை இப்படி ஒரு திருமணத்தை பார்த்திராத வகையில் திருமணம் நடைபெறும் இடத்திற்காக ஜாம் நகரில் பல ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கியிருக்கின்றனர். மேலும் இந்தக் காட்டில் பல அரிய வகை மரங்கள், விலங்குகள் என ஒரு இயற்கைச் சூழலில் இந்த திருமணத்தினை நடத்த உள்ளனர்.

8000 கடன் வாங்கி ஆரம்பித்த நிறுவனம்.. இன்று 9000 கோடி சொத்துக்களை பெருக்கியது எப்படி? கோவை KPR மில்ஸ்-ன் அசுர வளர்ச்சி

மேலும் விருந்தினர்களாக உலகத் தலைவர்கள் பலர் வர உள்ளனர். பல நாட்டுப் பிரதமர்களும், உலகின் டாப் பணக்காரர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அழைப்பிதழே ஒரு புத்தகம் போன்று உள்ளது. பணத்தினைக் கொட்டி நடத்தப்படும் இந்த ஆடம்பரக் கல்யாணம் இதுவரை உலகத்தில் யாருமே செய்திராதது.

ambani

முக்கிய விருந்தினர்களின் வருகைக்காக தனி விமானங்களே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக உணவுக் கலாச்சாரங்கள் அனைத்தும் இங்கே இடம்பெற உள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற பாப்பாடகி ரிஹான்னாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

3 நாட்கள் ஒரு திருவிழா போல நடக்கும் இந்த திருமண நிகழ்வை நாடே எதிர்நோக்கி உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக  விலை உயர்ந்த பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் விழா நடைபெறும் இடமானது உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

author avatar
Continue Reading

More in TRENDING

To Top