CINEMA
2 படத்தையும் ஓரம் கட்டிட்டு Escape ஆன அஜித்.. ஆப்ரேஷன் நடந்த ஆளு மாதிரியா பண்றாரு.. லீக்கான வீடியோ..
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல், ஏர் ஜெட் பைலட், பைக் ரேஸ் பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது, ஆனால் சில பல பிரச்சினைகளினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார்.
தற்போது விடாமுயற்சியின் எந்த அப்டேட்டும் வராமல் இருந்து நிலையில், அஜித்தின் 53வது படமான ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் பலருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது. இந்த நிலையில் சரியாக படப்பிடிப்பு நடக்காத நிலையில் அஜித் அவர்கள் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்திற்கு தன் பைக்கை எடுத்துக் கொண்டு பயணம் சென்று விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இங்கு இவரை நம்பி இரண்டு படங்கள் இருக்கும் நிலையில் இரண்டையும் கிடப்பில் போட்டுவிட்டு பயணம் மேற்கொண்டது சரியா என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் லைக்கா நிறுவனத்தில் நடக்கும் சில பிரச்சினையால் விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது, ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படம் வரும் ஜூலை மாசம் ஆரம்பிக்கப்படுவதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இடையில் இருக்கும் காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஜித் அவர்கள் தற்போது மன நிம்மதிக்காக தன் பைக்கை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் இதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Exclusive video of #Ajith sir.#Vidaamuyarchi #GoodBadUgly pic.twitter.com/RMZMXqCBkO
— THALA AJITH (@ThalaAjith_Page) March 19, 2024