Connect with us

CINEMA

தெலுங்கு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம்.. தான் அனுபவித்த வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசிய வாத்தி பட நடிகை..!!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். சம்யுக்தா மேனன் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். முதன்முதலாக மலையாளத்தில் உருவான உயரே படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்தடுத்த படம் வாய்ப்புகள் வந்ததால் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

Malayalam Actress Samyuktha Menon Shifts Focus to Performance-driven Roles in Tollywood

   

தனுஷ் நடித்த வாத்தி படத்தில் சம்யுக்தா அவருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சம்யுக்தா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் சம்யுக்தா கூறியதாவது, தெலுங்கு படத்தில் அதிக மேக்கப் செய்து கொண்டு நடிப்பது கடினமாக இருந்தது.

Samyuktha Menon set to join Jayasurya-Prajesh Sen's Vellam

மலையாளத்தில் மிகவும் இயற்கையான மேக்கப் தேவைப்படுவதால் எளிதாக இருக்கும். அங்கு சுதந்திரமாகவும் இருக்கும். தெலுங்கில் நமது அழகு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி இருக்கிறது. அது எனது வசதிக்கு எதிரான மன நிலைமையை கொண்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் போது மேக்கப் செய்பவர்களை மட்டுமே அனுமதிப்பேன்.

Samyuktha Menon about Dhanush Starring Vaathi Movie

நடிக்க தயாராக இருக்கும்போது அழகாக இல்லை என்றால் மேக்கப் ஆர்டிஸ்ட் நடுவே வந்து இடையூறு செய்வார். நான் சொல்வதை கேட்கும் போது சிறு பிள்ளைத்தனமாக இருக்கும். ஆனால் இது எனக்கு எளிதானது இல்லை. எப்போதும் எனது முகத்தில் தோலில் ஏதோ இருப்பது போலவே இருக்கிறது என கூறியுள்ளார். தற்போது மோகன்லாலுடன் ராம் படத்திலும், தெலுங்கில் ஸ்வயம்பு படத்திலும் சம்யுக்தா நடித்து வருகிறார்.

தனுஷ் பட நடிகைக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட தொல்லை.. மலையாள சினிமா தான் பெஸ்ட் என பகீர் பேட்டி! | Samyuktha Menon says she will not comfort to act in Telugu Industry ...

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top