சமையல் கலை வல்லுனரான வெங்கடேஷ் பட் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இவர் ஜட்ஜ் என்பதைத் தாண்டி சவுத் இந்தியன் பெயர்களில் இந்தியா முழுவதும் 18க்கும் மேற்பட்ட ரெஸ்டாரன்களை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பிரபல நட்சத்திர ஓட்டலில் தலைமை பொறுப்பிடம் இருந்து வருகின்றார். இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சி. காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக கடந்த நான்கு சீசன்களாக சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக ஜட்ஜ்-ஆக இருந்த வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து இருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் வெங்கடேஸ்வரர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக் டுபு குக் என்று நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இது குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வெங்கடேஷ் பட்டை பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் பேட்டி எடுத்திருந்தார் அதில் வெங்கடேஷ் பட் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அந்த பேட்டியில் அதில் அவர் கூறியிருந்ததாவது “தனக்கு ஆரம்பம் முதலே படிப்பில் கவனம் இல்லாத காரணத்தினால் சரியாக படிக்க வரவில்லை. அதுமட்டுமில்லாமல் எனது அப்பா மற்றும் தாத்தா அனைவரும் ஹோட்டல்களை நடத்தி வந்தவர்கள். அதனாலேயே சமையல் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. தனக்கு பத்து வயது இருக்கும் போது தனது அம்மாவிடம் சமையல் அறையிலேயே அதிக நேரத்தை செலவிடுவேன்.
தோசை, சப்பாத்தி எல்லாம் அழகாக சுட்டெடுப்பேன். இதைப் பார்த்த எனது பெற்றோர்கள் பத்தாவது முடித்தவுடன் ஹோட்டலுக்கு வந்துவிடு என்று கூறி விட்டார்கள். படிப்பும் சரியாக வராத காரணத்தினால் நானும் ஹோட்டலுக்கு சென்று விட்டேன். பின்னர் அங்கு சென்று ஹோட்டலில் இருக்கும் மாஸ்டர்களிடம் பல உணவுகளை சமைக்க கற்றுக் கொண்டேன். தனக்கு சமையல் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எனது பெற்றோர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பதற்கு பரிந்துரைத்தார்கள்.
எனக்கும் அது சரி என்று பட்டதால் அவசியம் மெமோரியல் கேட்டரிங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். பின்னர் சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் படித்து முடித்து முதுகலை பட்டம் பெற்றேன். அதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டலில் தனக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று பல உணவுகளை சமைக்க கற்றுக் கொண்டேன் அதில் கிடைத்த அனுபவத்தின் மூலமாக ஹோட்டல் சோலா நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினேன்.
1998 ஆம் ஆண்டு Sous chef என்ற உயர் பதவியை பெற்றேன். தற்போது அக்கோர்ட் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் ஓனர் ஜெனரட்சகனிடம் பணியாற்றி வருகிறேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தனது சொந்த பிள்ளை போல் என்னை பார்த்து வருகிறார். எனக்கு சொந்தமாக 18 நிறுவனங்கள் இருக்கின்றது. அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். 200 கோடி பிசினஸ்களை பார்த்து வருகிறேன்” என்று அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் பேசியிருந்தார்.