அயலி திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய அபிநட்சத்திரா வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அயலி திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அபி நட்சத்திரா. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் கதையை இந்த வெப் சீரியஸ் எடுத்துக் கூறியிருந்தது.
அயலி என்கின்ற காவல் தெய்வம் இருக்கும் ஊரில் ஒரு பெண் பக்கத்து ஊரு ஆணோடு காதலித்து சென்று விட்டதால் ஊரில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்கின்றது. அதற்கு காரணம் அயலி தெய்வத்தின் கோபம் என்று கூறிக்கொண்டு அந்த ஊரில் யார் வயதுக்கு வந்தாலும் ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற ஊர் கட்டுப்பாடு இருக்கின்றது.
அப்படி ஒரு வீட்டில் வசிக்கும் தமிழ்ச்செல்வி எப்படி மாறுபட்டு முதல் முறையாக அந்த ஊரில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று ஊரார்களை சமாளித்து பல போராட்டங்களை தாண்டி டாக்டராக மாறுகிறார் என்பதைப் பற்றிய கதைதான் இது. இந்த படத்தில் தத்ரூபமாக தமிழ்ச்செல்வியாக நடித்த அசத்தியிருப்பார் அபி நட்சத்திரா.
2005 ஆம் ஆண்டு பிறந்த இவர் சொந்த ஊர் ராஜபாளையம். தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன், நவரசா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். பெற்றோர்கள் இவர் நடிப்பதற்கு ஆதரவாக இருந்தாலும் தொடர்ந்து குடும்பத்தினர் இவருடைய பெற்றோருக்கு மகளை நடிக்க வைக்க கூடாது என்று டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்கள். அதை எல்லாம் தாண்டி தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
அபி நட்சத்திராவின் தந்தை ஏற்கனவே எஸ். சந்திரசேகர் திரைப்படங்களில் வேலை பார்த்திருக்கின்றார். ஆனால் பின்னர் பிசினஸ் ஒன்றை தொடங்கி அதில் கவனம் செலுத்தி வந்திருக்கின்றார். அவர் முழுக்க முழுக்க தனது மகளுக்கு பக்கபலமாக இருந்து நடிப்பதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றார்.
தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வரும் அபி நட்சத்திர சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கின்றார் . அவ்வப்போது நான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது சேலை கட்டி பெரிய பொண்ணு போல் காட்சியளிக்கின்றார். இதை பார்த்த பலரும் அயலி திரைப்படத்தில் நடித்திருந்த சிறுமியா இது இப்படி வளந்துட்டாங்களே என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.