மகாநதி சீரியலில் ராகினி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சாதிகாவின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மகாநதி சீரியலில் ராகினி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி இருக்கிறார் நடிகை சாதிகா.
1995 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 2 வயதிலேயே சீரியலில் நடித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு மங்கை என்கின்ற சீரியலில் நடிக்க வைத்துள்ளார்கள். பின்னர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார் .
முதன்முறையாக குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமான திரைப்படம் வீரநடை. அது மட்டும் இல்லாமல் ஆனந்தம் என்ற திரைப்படத்தில் முரளி அவர்களின் மகளாகவும் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, ஆதவன், பன்னிக்குட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் ஹீரோயினியாக நடித்த திரைப்படம் நெஞ்சில் துணிவிருந்தால், நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளனியாகவும் இருந்திருக்கின்றார்.
பின்னர் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீசன் 2வில் நடித்திருந்தார் .மகாநதி சீரியல் இவருக்கு மூன்றாவது சீரியல் ஆகும்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சாதிகா, அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..