Connect with us

CINEMA

என்னது, சினிமாவை விட்டு விஜய் விலகியதால் அஜித்துக்கு பல கோடி நஷ்ட்டமா..? என்னப்பா சொல்றீங்க..!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என இரு துருவங்கள் இருந்தன. அது காலப்போக்கில் மாறி ரஜினி, கமல் என உருவானது. ஆனால் தற்போது விஜய் அஜித் என ரசிகர்களின் கூட்டம் உருவாகியுள்ளது.

ஆரம்ப காலத்தில் விஜய்யின் படங்கள் வெளியாகும் போது அஜித் ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை கூறுவார்கள். அதே போல் அஜித்தின் படங்கள் வெளியாகும் போது விஜயின் ரசிகர்கள் தங்களது பங்கிற்கு சில பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவிப்பார்கள். இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் பெரும்பாலும் சந்தோஷமாகவே இருந்தனர்.

   

நடிகர்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டால் மட்டும் தான் திரையரங்குகளில் கூட்டம் கூடும் என்பதும் அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும்பாலான லாபம் வரும் என்பதும் புரிந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரே நாட்களில் இருவரின் படங்களை வெளியிட்டு தங்களது வியாபார புத்தியை வெளிப்படுத்தினர்.

ஆனால் தற்போது விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி அரசியலில் நுழைந்து மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இத்தனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஒருபுறம் வருத்தப்பட்டாலும் மற்றொருபுறம் விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பெருமையாக இருப்பதாகவும் தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றம் கண்டிப்பாக உருவாகும் எனவும் கூறி வந்தனர். அது மட்டும் இல்லாமல் பல ரசிகர்களும் வெளிப்படையாக சமூக வலைதளங்களில் எங்களுடைய ஓட்டு விஜய்க்கு தான் எனவும் கூறி வந்தனர்.

தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் அஜித்திற்கு தான் பெரும்பாலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அஜித்தின் திரைப்படங்கள் பெரும்பாலும் வசூல் பெறுவதுமில்லை வெற்றி பெறுவதுமில்லை. ஆனால் விஜய்க்கு நிகரான நடிகர் அஜித் என்பதால் மட்டுமே அஜித்தின் படத்திற்கு பெருவாரியான வியாபாரமும், லாபமும் கிடைத்தது. தற்போது விஜய் சினிமாவில் இல்லாததால் அஜித்திற்கு இனிமேல் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது என கூறி வருகின்றனர்.

இதுவரைக்கும் அஜித் பெரிய அளவில் தொடர்ந்து வசூல் சாதனை படைக்காவிட்டாலும், வெற்றி பெறாவிட்டாலும் விஜயின் பெயரை பயன்படுத்தியே தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி வந்தார். உதாரணத்திற்கு விஜய் ஒரு படத்திற்கு 200 கோடி வாங்குகிறார் என்றால் அஜித் பெரிய வெற்றி கொடுக்காமல் 150 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் நான் தான் விஜய்க்கு நிகரான நடிகர் என தயாரிப்பாளர்களிடம் கூறி சம்பளம் பெற்று வந்தார்.

ஆனால் இனிமேல் அஜித் நான்தான் விஜய்க்கு நிகரான நடிகர் என்ற பெயரை பயன்படுத்தி வெற்றியும் பெற முடியாது தயாரிப்பாளரிடம் அதிக சம்பளத்தையும் கேட்க முடியாது. இதனால் அஜித் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களோடு தான் போட்டி போட முடியும். மேலும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் தான் சம்பளமாக பெற்று வருவதால் இனிமேல் அஜித் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களா என்பது தெரியவில்லை. இதனை நினைத்து அஜித் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் புலம்பி வருவதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்ளாமல் ரஜினி, விஜய் ரசிகர் தான் அதிகமாக மோதிக் கொள்கின்றனர். காரணம் ரஜினி படத்தின் வசூல் சாதனைகளை விஜயின் திரைப்படங்கள் முறியடித்து வருவதால் தற்போது ரஜினி ரசிகர்களும் விஜயின் ரசிகர்களும்தான் திரையரங்குகளில் மோதிக் கொள்கின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top