Connect with us

CINEMA

“நான் அப்போ வரலாமா”..? நிபந்தனையுடன் விஜயகாந்த் குடும்பத்துக்கு அஜித் வைத்த கோரிக்கை.. கடுப்பாகி கேப்டன் குடும்ப செய்த செயல்..

நடிகர் விஜயகாந்த், கடந்த மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழக மக்களையே உலுக்கி விட்டது. ஏறக்குறைய 2016ம் ஆண்டு முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், எட்டு ஆண்டுகளாக பலவிதமான உடல் உபாதைகளுடன், நோய்களுடன் போராடியவர் ஒரு கட்டத்தில் மறைந்துவிட்டார். நோய், முதுமை அவரது மறைவுக்கு காரணமாக இருந்தாலும், இன்னும் விஜயகாந்த் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. என்றாலும் அவரது மறைவுக்காக கலங்கிப் போய் கண்ணீர் வடித்தனர்.

   

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், வைரமுத்து, கவுண்டமணி, டி ராஜேந்தர் போன்ற பல திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜய் வந்த போது ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். போலீசார் சிரமப்பட்டு, அவரை கூட்டத்தில் இருந்து காப்பாற்றி அழைத்து வந்தனர். யாரோ ஒருவர், விஜய் கார் மீது செருப்பு வீசிய சம்பவமும் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நடிகர் அஜீத்குமார், அஜர்பைஜானில் இருந்து சில தினங்களுக்கு முன்பே, சென்னை திரும்பி விட்டார். ஆனால் இதுவரை கேப்டன் மறைவு குறித்து ஒரு இரங்கல் செய்தி கூட அவர் வெளியிடவில்லை.

இந்த சூழலில், அஜீத்குமார் தரப்பில் இருந்த விஜயகாந்த் வீட்டுக்கு போன் அழைப்பு வந்திருக்கிறது. அதில் இரவு 3 மணிக்கு, அஜீத்குமார் உங்கள் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருகிறார். அந்த நேரத்தில் வருவதால் உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையே, ஏனென்றால் மற்ற நேரங்களில் வந்தால் ரசிகர் கூட்டம் வந்துவிடும். ரசிகர் கூட்டத்தை பார்த்தாலே அஜீத்குமாருக்கு அலர்ஜி ஆகி விடும். அதனால் யாருமில்லாத இந்த நேரத்தில் வர அவர் சம்மதித்து இருக்கிறார்.

அதற்காக தான் கேட்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதைக்கேட்டு டென்சன் ஆன கேப்டன் குடும்பத்தை சேர்ந்தவர்கள், சொல்கிறோம் என்று மட்டும் கூறிவிட்டு போனை வேகமாக வைத்துவிட்டனர். நள்ளிரவு 3 மணிக்கு திருட்டுத்தனமாக சென்று பார்க்க வேண்டிய இடமா அது, அப்படி சூழலில் போய் துக்கம் விசாரிக்கவும் வேண்டுமா, இவர் துக்கம் விசாரிக்க இப்படி ஒரு நேரத்தில் வருவதாக அநாகரிகமாக கேட்கலாமா, என பலரும் அஜீத்குமாரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top