Categories: சினிமா

2 கோடி ரூபாய் நிவாரண நிதி.. வீட்டில் 100 பேருக்கு இடம்.. இத்தனையும் ரகசியமா செய்தாரா அஜீத்..?

Spread the love

மிக்ஜம் புயலால் சென்னை மழைவெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது. வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கிய நிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டு போனது. குடிநீர் இல்லாமல், உணவு, பால் போன்ற அத்யாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிபட்டனர். இந்த சூழலில் சினிமா நடிகர்கள் சிலர், தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். கேபிஒய் பாலா, ரூ.5 லட்சம் வரை தனது சொந்த பணத்தை செலவு செய்துள்ளார். சூர்யா கார்த்தி தரப்பில் ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் தரப்பில் ரூ. 10 லட்சம் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியாக தந்துள்ளனர்.

#image_title

இதில் அஜீத் தரப்பில் இருந்து எந்தவிதமான உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படவில்லை. 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அஜீத் போன்ற டாப் ஸ்டார்கள் நடிகர்கள் இப்படி மக்களுக்கு உதவவில்லையே. குறிப்பாக கலக்கப்போவது யாரு பாலா போன்ற சின்ன நடிகர்கள் கூட ரூ. 5 லட்சம் வரை உதவியாக செய்கின்றனர். பார்த்திபன், அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து உணவு பொட்டலங்களை தந்தனர். ஆனால் அஜீத் இதற்கு உதவவில்லையே என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

#image_title

ஆனால் அஜீத்குமார் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்திருப்பதாக பத்திரிகையாளர் சபீதா ஜோசப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை கூறியிருக்கிறார். இப்போது சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 பேரை தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இதுதவிர தமிழக அரசுக்கு பொது நிவாரண நிதியாக ரூ. 2கோடி வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களில் 150 பேருக்கு தலா 10 ஆயிரம் என அவர்களது வங்கி கணக்கில் போடச் செய்துள்ளார். மழைவெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்க போட் அனுப்பியும் உதவி இருக்கிறார். அஜீத் வீட்டில் இருந்து பலருக்கும் பிரியாணி சமைத்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இப்படிபட்ட பல உதவிகளை செய்த அஜீத்குமார் இவற்றை வெளிப்படையாக, விளம்பரப்படுத்தி செய்யவில்லை. அதனால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை என சபீதா ஜோசப் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

2 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

2 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

2 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

3 மணத்தியாலங்கள் ago