ஷூட்டிங் ஸ்பாட்டில், வரம்பு மீறி நடந்துக்கொண்ட வடிவேலு.. 21 வருஷமா அஜித்துடன் நடிக்காததுக்கு இது தான் காரணமா..

By Sumathi

Updated on:

நடிகர் அஜீத்குமார், இப்போது தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்கள் வரிசையில் ரஜினி, கமல், விஜய், அஜீத் என நான்கு பேரில் ஒருவராக இருக்கிறார். இவரது படங்களில் நடிக்க நடிகர்களுக்குள், இவரது படங்களை இயக்க இயக்குநர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஏனென்றால் இவரது படங்களுக்கு அந்தளவுக்கு சினிமா மார்க்கெட்டில் பலத்த வரவேற்பு உள்ளது. அஜீத் நடித்த படங்களில் காமெடி சீன்களில் நடித்த பலரும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர்.

Ajith KumarRe

   

அந்த வகையில் வையாபுரி, கருணாஸ், ரோபோ சங்கர், மயில்சாமி, விவேக், தாமு, தாடி பாலாஜி, ரமேஷ் கண்ணா என பலரும் அஜீத்குமாருடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர். ஆனால், அஜீத்குமாருடன் நடிகர் வடிவேலு ஒரு கட்டத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அதாவது கடந்த 21 ஆண்டுகளாக தனது படங்களில் நடிக்கும் வாய்ப்பை, நடிகர் வடிவேலுவுக்கு அஜீத்குமார் தர மறுத்துவிட்டார். அவருக்கு என் படங்களில் இடமில்லை என்று அஜீத்குமாரே, வாய்மொழி உத்தரவாக கூறியது, 21 ஆணடுகளுக்கு முன்னால் நடந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜா. ரோஜா, பிரியங்கா திரிவேதி, லிவிங்ஸ்டன், வையாபுரி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் வடிவேலுவும் அஜீத் நண்பராக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில், ஹீரோ என்ற மரியாதை சிறிதும் இன்றி அஜீத்குமாரை வாடா, போடா, டேய் மச்சா என்று ஒருமையில் பேசி இருக்கிறார் வடிவேலு. இதுகுறித்து படத்தின் இயக்குநர் எழில், வடிவேலுவிடம் பேசியும், அப்படி டயலாக் இல்லையே என்று கூறியும் வடிவேலு அதை கேட்கவில்லை.

Ajith KumarRe

அஜீத்தை விட இப்போ எனக்குதான் மார்க்கெட் இருக்கு என்கிற தொனியில் தெனாவெட்டாக நடந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அஜீத்குமார், இனிமேல் என் படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார். அதனால்தான், 21 ஆண்டுகளாக அஜீத் படங்களில் வடிவேலு நடிக்க வாய்ப்பின்றி போனது.

author avatar
Sumathi