விமான நிலையத்தையும் விட்டு வைக்காத மிக்ஜாம் புயல்.. விமானங்கள் தண்ணீரில் மிதக்கும் அவலம்.. வைரலாகும் வீடியோ..!!

By Nanthini on மார்கழி 4, 2023

Spread the love

வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இந்த நிலையில் சென்னையில் ரயில் சேவைகள், பேருந்து மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ள நிலையில் விமானங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.